புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2014



ஒன்ராறியோ மாகாண தேர்தலில் தமிழர்களின் வெற்றியை தமிழர்கள் உறுதிப்படுத்தும் வரலாற்றுக் காலம்

ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கின்றன. இந்தத் தேர்தலில் கலந்து கொண்டு தங்கள் வாக்குகளைத் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்/ கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
ஒரு மக்களாட்சி முறைமையில் வாக்குரிமை என்பது பெறுமதி மிக்க ஆயுதமாகும். அதனை எமது சொந்த நலத்துக்கு மட்டுமல்ல சமூக நலத்துக்கும் பயன்படுத்த வேண்டும்.
ரொறன்ரோ பெரும்பாகப் பகுதியில் 6,054,191 மக்கள் (2011) வாழ்கிறார்கள். இதில் ரொறன்ரோவில் தமிழ்மொழி பேசுவோரது விழுக்காடு 1.9 ஆகும். எண்ணிக்கை அடிப்படையில் 10 ஆவது இடத்தில் தமிழ்மொழி இருக்கிறது.
ரொறன்ரோ பெரும்பாகத்தில் 0.9 விழுக்காடாகும். கனடா மக்கள் தொகையில் தமிழ்மொழி பேசுவோர்களது விழுக்காடு 0.4 ஆகும். உண்மையில் இந்த விழுக்காடு இன்னும் அதிகமாக இருக்கலாம். பலர் தங்களது வீட்டு மொழி தமிழ் எனப் பதிவு செய்யத் தவறியிருக்கலாம்.
ரொறன்ரோவில் தமிழர்களது எண்ணிக்கை 300,000 லட்சத்துக்கும் அதிகமாகும். ஆனால் மத்திய, மாகாண, நகர அரசுகளில் தமிழர்களது பிரதிநிதித்துவம் எமது எண்ணிக்கைக்கு ஒப்பீடாக இல்லை.
நடுவண் நாடாளுமன்றத்தில் ஒருவரும் மாநகரசபையில் ஒருவரும் ஆக இருவர் மட்டுமே தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். மாகாண நாடாளுமன்றத்திலும் ரொறன்ரோ மாநகரசபையிலும் தமிழர்களது பிரதிநிதித்துவம் அறவே இல்லாது இருக்கிறது.
எதிர்வரும் யூன் 12 ல் நடைபெற இருக்கும் மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் பின்வருவோர் போட்டியிடுகிறார்கள்.
நீதன் சண்முகநாதன் - ஸ்காபரோ றூச் றிவர்
சாண் தயாபரன் - மார்க்கம் யூனியன்வில்
கென் கிருபா - ஸ்காபரோ கில்வூட்
இவர்கள் எந்தக் கட்சியில் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாது எங்களது வாக்குகளை அவர்களுக்கு அளித்து அவர்களை இந்தத் தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் பலத்தை மேலும் பலப்படுத்திக் கொள்ளலாம்.
எனவே இந்த வாய்ப்பை நழுவவிடாமல் மேற்குறித்த வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை அளித்து அவர்களை மாகாண நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இது ஒவ்வொரு தமிழ் வாக்காளரதும் கடமையாகும்.

ad

ad