புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

10 ஜூன், 2014

கொழும்பில் மோடி,ஜெயலலிதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.ஜெயலலிதாவின் கொடும்பாவி எரிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று வலியுறுத்தியே அக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு-காலி வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் உருவப்பொம்மை எரிப்பு
இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று வலியுறுத்தி கொள்ளுப்பிட்டியிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுவினர் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் உருவப்பொம்மையை தீயிட்டு எரித்துள்ளனர்.