புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2014


 
நாட்டின் பல பாகங்களிலும் பரிசீலனை செய்ததில் வடமாகாணமே நீர் வாழ் உயிரினங்களை வளர்த்தெடுக்குந் தொழிலுக்கு மிகவும் பொருத்தமான இடம் என்பதை ஆராய்ந்தே இங்கு எம் மாகாணத்தில் தொழில் நுட்பப் பயிற்சிகளையும் தாம் வழங்கிவருவதாக வியட்நாம் தூதுவர் டோன் சின் தான்ங் தெரிவித்தார்.
 
 
சோஷலிச குடியரசாகிய வியட்நாம் தூதுவர் டோன் சின் தான்ங்  இன்று காலை 11.30 மணியளவில்  வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனை  அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
 தம் நாட்டினால் வழிநடத்தப்படும் நீர்வாழ் உயிர் சம்பந்தமான வியட்நாம் தொழில்நுட்ப உதவித் திட்டம் என்ன விதத்தில் கிளிநொச்சி வவுனியா போன்ற இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன என்பதைப் பார்வையிடவே தாங்கள் இங்கு வந்ததாகத் தெரிவித்தார்.
 
மேலும் உள்நாட்டு நீர் நிலைகள் எங்கள் வடமாகாண சபையின் அதிகாரத்தினுள் வருவதால் மேலும் மேலும் இப்பேர்ப்பட்ட நீர் வாழ் உயிரின இனப் பெருக்கத்திற்கான விஞ்ஞான ரீதியான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்தால் காலா காலத்தில் உள்ள நீர் நிலைகளில் பெருகி வரும் உயிரினங்களை மீன்களை கடலட்டைகளை காணிப் பாசிகளை எல்லாம் நல்ல விலைக்கு சீனா யப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்றுரைத்தார்.
 
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் போரினால் பாதிக்கப்பட்டு எதுவுமே இல்லாத ஒரு நிலையில் இருந்த வியட்நாம் இன்று பல இலட்ச டாலர்களுக்கு மீன் ஏற்றுமதி செய்வதாகவும் தமது நாடு பொருளாதார ரீதியாக மேம்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
 
மேற்படி தொழில் நுட்பப் பயிற்சி முறைகளின் வெற்றிக்கு வித்திடும் விதத்தில் தாம் தொடர்ந்து எமக்குப் போதிய உதவிகளை வழங்கப் போவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
 
 
 
 

ad

ad