புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2014


வழக்கில் இருந்து தயாளு அம்மாளுக்கு முழுமையாக விலக்கு அளிப்பதா? வேண்டாமா? :ஓ.பி.சைனி தீர்ப்பு ஒத்திவைப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்றதற்கு கைமாறாக, கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 கோடி முறைகேடாக பணம் வழங்கப்பட்டதாக
மத்திய அமலாக்கப்பிரிவினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்களுக்கு எதிராக மே 25–ந்தேதி சி.பி.ஐ. தனிக் கோர்ட்டில் அமலாக்கப்பிரிவினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 9 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந் துள்ளது. தயாளு அம்மாள் சார்பில் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடை பெற்றது.
அப்போது தயாளு அம்மாள் சார்பில் ஆஜரான வக்கீல் அமரேந்திர சரண் தனது வாதத்தின்போது, தயாளு அம்மாள் ஞாபக மறதி நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், நெருங்கிய உறவினர்களைத்தவிர வேறுயாரையும் நினைவுபடுத்தி பார்த்து பேசும் நிலையில் அவர் இல்லை. தானாக எழுந்து நின்று இரண்டு அடி கூட எடுத்துவைக்க முடியாத நிலையில் அவரது உடல்நிலை உள்ளது. வயது முதிர்வு காரணமாகவும் நீண்டதூரம் அவரால் பயணம் செய்ய முடியாது.
புதிய மருத்துவக்குழுவை இந்த கோர்ட்டு நியமனம் செய்து தயாளு அம்மாள் உடல்நிலையை பரிசோதனை செய்யலாம். அந்தக்குழு அறிக்கை சமர்ப்பித்த பிறகு கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுக்கு நாங்கள் கட்டுப்பட தயார். இந்த வழக்கில் இருந்து தயாளு அம்மாளை முழுமையாக விடுவிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அமலாக்கப்பிரிவு சார்பில் வக்கீல் சோனியாசிங், தயாளு அம்மாளின் வயதை காரணம் காட்டி அவருக்கு ஜாமீன் வழங்கப்படுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், வழக்கில் இருந்து முழுமையாக அவரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு நாங்கள் கடுமையாக எங்களது எதிர்ப்பை பதிவு செய்கிறோம்.
கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பான அனைத்து ஆலோசனை கூட்டங்களிலும் தயாளு அம்மாள் பங்கேற்றிருக்கிறார். ரூ.200 கோடி கலைஞர் டி.வி.க்கு வந்தது தொடர்பான அனைத்து தகவல்களும் முறைப்படி தயாளு அம்மாளுக்குத்தான் கூறப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை பொறுத்தவரை தயாளு அம்மாள் முக்கிய குற்றவாளியாக இருப்பதாலும் அவரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வாதிட்டார்.
சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் தயாளு அம்மாளிடம் சாட்சியம் பெறுவதற்காக சென்ற குழு அவரிடம் 4 மணி நேரம் நடத்திய விசாரணையின்போது ஒரே இடத்தில் அமர்ந்து கேள்விகள் அனைத்திற்கும் தெளிவான பதிலை அளித்துள்ளார். அவர் ஞாபக மறதி நோயால் அவதிப்படுவதாக எந்த அறிக்கையும் கூறவில்லை. நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆஜராகாத அளவுக்கு அவருக்கு எந்த உடல் நல பாதிப்பும் இல்லை என்று மருத்துவர் குழு தங்களது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
புதிய மருத்துவக்குழுவை அமைத்தாலும், அது சென்னையை சேர்ந்த மருத்துவக்குழுவாக இருக்கக் கூடாது. ஏற்கனவே அவரது உடல் நிலையை பரிசோதனை செய்த எய்ம்ஸ் மீண்டும் பரிசோதனை செய்வதில் ஆட்சேபம் இல்லை என்று அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் இருந்து தயாளு அம்மாளுக்கு முழுமையாக விலக்கு அளிப்பதா? வேண்டாமா? என்பதற்கான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

ad

ad