புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2014


தென்னாபிரிக்க ரமபோசாவின் திட்டம் தோல்வி?
தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிறில் ரமபோசாவின் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அரச ஆதரவு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு நிகரான ஓர் ஆணைக்குழுவினை நிறுவும் நோக்கிலேயே ரமபோசா இலங்கைக்கு விஜயம் செய்தார்.
தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முயற்சிகள் தோல்வியடைந்ததாக 2013ம் ஆண்டில் அந்நாட்டு அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளினால் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை நிறுவ முடியவில்லை.
ஆணைக்குழு நிறுவப்பட முன்னதாக வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட்டு 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
இதனால் ஆணைக்குழு நிறுவும் முயற்சி தோல்வியடைந்துள்ளது என திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து இந்தியாவிற்கு அறிவிக்க உள்ளதாக ரமபோசா தெரிவித்துள்ளார்.

ad

ad