11 ஜூலை, 2014தேமுதிக தனித்து போட்டியிட தயாரா?:
சட்டசபையில் அமைச்சர் வைத்திலிங்கம் சவால்

 
 


தமிழக சட்டசபையில் தொழிலாளர்கள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்த போது திருக்கோவிலூர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ வெங்கடேசன் பேசுகையில், ‘
‘எங்களுக்கு ஏற்றம் தந்து ரசித்து கொண்டிருக்கும் கேப்டன் அவர்களே...’’ என்று பேசத் தொடங்கினார்.
அப்போது அமைச்சர் வைத்திலிங்கம் குறுக்கிட்டு, ‘‘ஏற்றம் என்று சொல்கிறீர்களே... எது ஏற்றம்? பாராளு மன்ற தேர்தலில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது ஏற்றமா? அல்லது பல தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது ஏற்றமா? உங்கள் தலைவரின் தகுதி என்ன என்பது தேர்தலில் மக்களுக்கு தெரிந்து விட்டது.
இனி யாரும் உங்களை சீண்ட மாட்டார்கள். உங்கள் கட்சிக்கு தைரியம், திரானி இருந்தால் தனித்துப் போட்டியிட்டு ஒரு தொகுதிக்கு 1000 ஓட்டாவது வாங்க முடியுமா? என்றார். உடனே வெங்கடேசன், ‘‘தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரை தவிர தொடர்ந்து யாரும் ஆட்சி நடத்தியதில்லை’’ என்றார்.
இதற்கு பதில் அளித்த நத்தம் விசுவநாதன், ‘‘தனித்துப் போட்டியிட தே.மு.தி.க.வுக்கு தகுதி உள்ளதா என்று தான் அமைச்சர் கேட்டார். உங்கள் கட்சி தலைவர்கள் மக்களோடும், ஆண்டவனோடும் கூட்டணி என்றார். என்றாலும் கடைசியில் கூட்டணி வைத்துக் கொண்டார் என்றார்.