புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2014


வெளிநாடுகளின் அனுதாபம் தேவையில்லை! ஜனாதிபதி - மஹிந்தவின் ஆட்சியிலேயே அழுத்தங்கள் அதிகரித்தன: மனோ
வெளிநாடுகளின் அனுராபத்தை கோரிய காலம் முடிவடைந்து விட்டதாகவும், அனுதாபத்தை எதிர்பார்த்த, அனுதாபம் கோரிய காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தற்போது  பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கும் நாடாக இலங்கை உருவாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.
தோல்வியடைந்த நாடுகளைப் போன்று எவரின் அனுதாபத்தையும் கோரி நிற்க வேண்டிய அவசியமில்லை.
நாட்டை நேசிக்கும் ஒர் மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டு;ம்.
நாடு பற்றி பெருமிதத்துடன் பேசக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற   பரிசளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போது  ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவின் ஆட்சியிலேயே இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்தன: மனோ கணேசன்
இலங்கையின் மீது சர்வதேச அழுத்தம் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்திலேயே ஏற்பட்டது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
1989 ஆம் ஆண்டில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறி இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே அன்று ஜெனீவாவுக்கு சென்று முறையிட்டார்.
எனவே இன்று அவர் சர்வதேச தலையீடு பற்றி கூறுவது அபத்தமானது என்று மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சிங்கள தொலைக்காட்சியில் நேற்று இரவு இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
போரின் போது சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொண்ட இலங்கையின் சிங்கள கட்சிகள் இன்று சமாதானத்துக்கு மாத்திரம் சர்வதேசத்தின் உதவியை மறுப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேல்மாகாணத்தில் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு உள்ள அதிகாரங்கள் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இல்லை என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.
அன்று யுத்தத்தின் போது இனித்த சர்வதேசம், இன்று சமரசம் செய்ய வந்தால் கசக்கிறதா?- மனோ கணேசன்
அன்று யுத்தத்தின் போது இனித்த அதே சர்வதேசம்தான் இன்று சமாதானத்தின் போது உங்களுக்கு கசக்கிறது என நேற்றிரவு நடைபெற்ற பிரபல தனியார் தொலைக்காட்சியின் சிங்கள மொழிமூல நேரலை அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்ட ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
உங்கள் அரசு தனியாக யுத்தம் செய்யவில்லை. அமெரிக்கா முதல் இந்தியா வரை முழு உலகும் அளித்த ஒத்துழைப்பினால்தான் நீங்கள் வெற்றி பெற்றீர்கள். அன்று உங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய அதே உலகம்தான், இன்று இந்நாட்டு தேசிய இனப்பிரச்சினைக்கு, சமரசம் செய்ய வந்துள்ளார்கள்.
அன்று யுத்தத்தின் போது இனித்த அதே சர்வதேசம்தான் இன்று சமாதானத்தின் போது உங்களுக்கு கசக்கிறது என மனோ கணேசன் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சாந்த பண்டார எம்பி, ஹெல உறுமயவின் நிஷாந்த வணசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் எரான் விக்கிரமரட்ன ஆகியோருடன் கலந்துகொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
தென்னாபிரிக்க்கா இலங்கை இனப்பிரச்சினையில் பங்கு வகிக்க முடியாது என உங்களில் சிலர் கூச்சல் எழுப்புகிறீர்கள். ஆனால், இலங்கை உள்நாட்டு பிரச்சினையில் இந்த தென்னாபிரிக்க தொடர்பு எப்படி ஏற்பட்டது என தெரியுமா?
2013ம் வருடம் நவம்பர் மாதம், தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் சூமா பொதுநலவாய மாநாட்டுக்கு இலங்கை வந்த போது உங்கள் நாட்டு அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டு எங்கள் நாட்டு பிரச்சினையை தீர்க்க உதவுங்கள் என அவரிடம் கோரிக்கை விடுத்ததே, நமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சதான்.
அதற்கு பிறகு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் ஒரு குழு, 2014ம் வருடம் பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்கா சென்று அந்நாட்டு அரசுடன் இதுபற்றி மேலும் பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆகவேதான் ஜேகப் சூமா, சிறில் ரம்போஷாவை இந்நாட்டுக்கு அனுப்பி வைத்தார். ரம்போஷா சாதாரண நபர் அல்ல. அவர்தான் 2019ம் வருடத்தில் நடைபெற உள்ள அந்நாட்டு ஜனாதிபதி தேர்தலில் தென்னாபிரிக்க தேசிய காங்கிரசின் வேட்பாளராக போட்டியிட உள்ளார். இன்றைய ஜனாதிபதி ஜேகப் சூமாவின் ஓய்வுக்கு பிறகு ரம்போஷாதான் அந்நாட்டு ஜனாதிபதி.
எனவே சிறில் ரம்போஷாவை இந்த நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்துவிட்டு, இப்போது அவர் ஒரு சுற்றுலாபயணி போல் வந்தார் என அரசின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல சொல்கிறார். அதாவது எதிர்கால தென்னாபிரிக்க ஜனாதிபதியைதான் அழைத்து வந்து அவமானப்படுத்தியுள்ளீர்கள்.
இலங்கையின் மனிதவுரிமை விவகாரங்களில் சர்வதேச தலையீடு எப்படி ஏற்பட முடியும் எனவும் கூச்சல் எழுப்புகிறீர்கள்? இதையும் ஆரம்பித்து வைத்தது, மகிந்த ராஜபக்சதான். 1989ம் வருடம் தெற்கில் ஏற்பட்ட மனிதவுரிமை மீறல்களின் போது ஜெனீவா போனவர், அன்றைய எதிர்க்கட்சி எம்பி மகிந்த ராஜபக்ச.
நடைபெற்ற யுத்தத்தின்போதும் முழு உலகின் உதவிகளை பெற்றுக்கொண்டீர்கள். அதற்கு மாற்றாக 13ம் திருத்தத்தை கண்டிப்பாக அமுல் செய்கிறேன் என்றும், அதை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்றும், ஐநா மனித உரிமை நியமங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் நடைபெற்ற மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பேன் என்றும் 2009ம் வருடம் மே மாதம் ஐநா செயலாளர் நாயகம் பான் கிமூனுடன் எழுத்துமூல கூட்டு பிரகடனம் செய்தது, நமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சதான்.
ஆகவே எல்லாவற்றையும் நீங்களே செய்து முடித்துவிட்டு இப்போது கூச்சல் எழுப்புகிறீர்கள். உலகத்துக்கு ஒருமுகம், உள்நாட்டுக்கு வேறு முகத்தை காட்டுகிறீர்கள். இதனால்தான் இன்று ஐநாவின் விசாரணைகளுக்கு முகங்கொடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள்.

ad

ad