புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2014


தமிழகத்திற்குள் ஐ.எஸ்.ஐ. அமைப்பில் பயிற்சி பெற்ற ஈழத்தமிழர்கள் ஊடுருவல்? - சந்திரிக்கா நாட்டின் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுவதை தவிர்க்க தீர்மானித்துள்ளார்
தமிழகத்திற்குள் ஐ.எஸ்.ஐ. அமைப்பினரால் பயிற்சி பெற்ற இலங்கைத் தமிழர்கள் அதிக அளவில் ஊடுருவியுள்ளதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று அவரது மாளிகையில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்து தலைவர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்பாகவும் பிரணாப் முகர்ஜியிடம் முறையிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஐ.எஸ்.ஐ. அமைப்பால் (islamic state of iraq and syria) பயிற்சி பெற்ற இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்குள் அதிக அளவில் ஊடுருவியுள்ளனர்.
ஈராக்கில் செயல்பட்டு வரும் கலிஃபா ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள்கூடசேர்ந்துள்ளனர். எனவே, தீவிரவாதிகள் ஊடுவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா நாட்டின் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுவதை தவிர்க்க தீர்மானித்துள்ளார்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக கருத்து வெளியிடுவதை தவிர்க்க தீர்மானித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் கருத்துக்களை வெளியிடுவது அவரது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு தடையாக அமையக் கூடும் என அவரது ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்தே சந்திரிக்கா இந்த தீர்மானித்தை எடுத்துள்ளார். இதனடிப்படையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதை தவிர்ப்பதற்காக அவருக்கு நெருக்கமானவர்கள் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஒரு மாதத்திற்கும் மேலாக வெளிநாட்டில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி இலங்கை திரும்பியுள்ளதுடன் அவரது எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது

ad

ad