11 ஜூலை, 2014


தமிழகத்தின் முதல் சோதனை குழாய் குழந்தையான கமலா ரத்னம் பெண் குழந்தை பெற்றார்
தென்னிந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தையான கமலா ரத்னம், நேற்று தனது 24வது வயதில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். நேற்று காலை ஜி.ஜி மருத்துவமனையில்
அறுவை சிகிச்சை மூலம் 2.8 கிலோ எடையுள்ள குழந்தையை அவர் பெற்றுத்தந்தார்.

1990 ஆம் ஆண்டு பெண்களுக்கான சிறப்பு மருத்துவரான டாக்டர் கமலா செல்வராஜ் சோதனை குழாய் மூலம் குழந்தையான கமலா ரத்னத்தை பிறக்க வைத்தார். ஆனால் அந்த குழந்தை தனது 24வது வயதில் ஒரு பெண் குழந்தையை ஈன்றதிலும் தன்னுடைய பங்களிப்பை அளிக்க வேண்டியது இருக்கும் என நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். 
இது குறித்து டாக்டர் கமலா செல்வராஜ்,  ‘’இந்த நாளுக்காக தான் நான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன். 24 வருடங்களுக்கு முன் கமலா பிறந்த போது பல்வேறு விதங்களில் அச்சங்கள் எழுப்பப்பட்டது. அவளால் சகஜமான வாழ்க்கையை வாழ முடியுமா, அவருக்கு குழந்தை பிறக்குமா என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு இன்று தான் விடை கிடைத்திருக்கிறது’’ என்றார்.