11 ஜூலை, 2014


திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்: தேமுதிக உறுப்பினர்கள் வெளிநடப்பு
தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுக உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி அமைச்சர் வைத்திலிங்கம் அவதூறாக பேசிக்கொண்டிருந்தார்.  அமைச்சரின்
பேச்சைக்கண்டித்து சபாநாயகரை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.  அமைச்சரின் அவதூறு பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரினர். இதனால் திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.


இதையடுத்து தேமுதிக, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உறுப்பினர்கள் அவை வெளிநடப்பு செய் தனர்.