புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2014


பௌத்த சாசன அமைச்சு ஒர் பிச்சைக்கார அமைச்சு!– இராவணா பலய - ஊவா மாகாணசபை நாளை கலைப்பு
பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சு ஓர் பிச்சைக்கார அமைச்சு என இராவணா பலய அமைப்பு சாடியுள்ளது.
பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சு வெறும் சுற்றுநிருபங்களை மட்டுமே வெளியிட்டு வருகின்றது என இராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த சாசன அமைச்சு எதற்கும் பயனற்ற ஓர் பிச்சைக்கார அமைச்சாகும். பௌத்த சாசனத்தின் மேம்பாட்டிற்காக எதுவும் செய்யவில்லை.
இவ்வாறான நிலைமைக்கு அமைச்சை இட்டுச் சென்றமைக்கான பொறுப்பினை மதவிவகார அமைச்சர் டி.எம். ஜயரட்ன ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு டொரிங்டனில் அமைந்துள்ள தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்தி;ப்பல் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஊவா மாகாணசபை நாளை கலைக்கப்படவுள்ளது
ஊவா மாகாணசபை இன்று கலைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலமைச்சர் சசிந்திர ராஜபக்சவினால் மாகாணசபையை கலைக்குமாறு ஆளுனர் நந்த மெத்தியூவிடம் கோரப்படவுள்ளது.
முதலமைச்சரின் இந்த எழுத்து மூல கோரிக்கையைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு ஊவா மாகாணசபை கலைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதியுடன் ஊவா மாகாணசபையின் பதவிக் காலம் பூர்த்தியாகின்றது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ம் திகதி அல்லது 13ம் திகதி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad