புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2015

தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்காது!- எம்.கே.சிவாஜிலிங்கம்

வடமாகாண முதலமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்காது என நம்புகிறோம். அவ்வாறு எடுத்தால் தமிழ் மக்கள் அதனை நிராகரிப்பார்கள் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பலான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
இது விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிட்டிருந்ததாவது,
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள்; குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட வரைபு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்று தயாரித்து அதற்கமைய செயற்படுவதற்காக பல தரப்பினர்களையும், உள்ளடக்கியதாக தமிழ் மக்கள் பேரவையென்ற அமைப்பொன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றதுஇந்நிலையில் குறித்த அமைப்பு தொடர்பில், பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த அமைப்பு தமிழ் மக்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதில் பல கட்சிகளினதும் மற்றும் பொது அமைப்புக்களினதும் பிரதிநிதிகள் எனப் பலரும் அங்கம் வகிக்கின்றனர்.
கலை, கலாச்சாரம் என்பவற்றைப் பாதுகாத்து சீரழிவுகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தயாரிப்பதற்கும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆயினும் இது கூட்டமைப்பிற்கு எதிராக உருவாக்கப்பட்டதாக சில தரப்பினர்கள் கூறினாலும் அவ்வாறு அந்த நோக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
குறித்த அமைப்பானது இவ்வாறு செயற்பட்டால் தமிழ் மக்களின் ஆதுரவு நிச்சயம் கிடைக்கும், ஆனால் கூட்டமைப்பிற்கு எதிராக அந்த அமைப்போ அல்லது அந்த அமைப்பின் உறுப்பினர்களோ செயற்பட்டால் தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்புக்களே ஏற்படுமென்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த அமைப்பில் இணைந்து கொள்வது தொடர்பில் நான் சார்ந்த கட்சியான ரெலோவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டால் நாங்கள் அதில் இணைந்து கொள்வது தொடர்பில் பரிசீலிப்போம்.
அதாவது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தேவைகளை முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களுக்குச் சார்பானதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற இந்த அமைப்பு தொடர்பில் சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆனால் அவ்வாறு இந்த அமைப்பு கூட்டமைப்பிற்கு எதிராகச் செயற்பட்டால் மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிப்பார்;கள் என்றார்.
செந்தூரனின் குடும்பத்திற்கான உதவி தொடர்பில்,
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி கடிதம் எழுதிவிட்டு புகைவண்டி முன்னால் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் செந்தூரனுடைய குடும்பத்தினருக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கும் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.
நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் செந்தூரன் கடந்த மாதம் 26ம் திகதி ரயில் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார்.
இந் நிலையில் அவரின் உயிரிழப்பிற்குப் பின்னர் புலனாய்வாரள்கள் அது தொடர்பில் விசாரித்து வருவதுடன் அவரின் குடும்பத்தினரையும் அச்சுறுத்தி வருகின்றனர். குறிப்பாக அவரின் கையெழுத்துடன் அமைந்திருந்த கடிதம் தொடர்பிலேயே அதிகளவில் விசாரித்து வருகின்றனர்.
இதற்கமய பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களிடத்திலும், இவ்வாறு விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே நேரம் அவரின் குடும்பத்தினரிடமும் கடுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இவ்வாறு தொடரச்சியாக மாறி மாறி மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளாலும் அச்சுறுத்தல்களாலும் குடும்பத்தினர் அச்சமடைந்திருக்கின்றனர்.
அத்துடன் தங்களுடைய மகன் கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரிழந்தமை போன்று தாங்களும் கடிதம் எழுதிவைத்துவிட்டு குடும்பத்தினருடன் உயிரிழக்க வேண்டி வருமென்றும் தகப்பனார் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் கடந்த சில தினங்களிற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு வந்து பல்வேறு இடங்களிற்கும் சென்று பல தரப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிவிட்டுச் சென்றிருக்கின்றார்.
இவ்வாறு அவரின் வருகையை முன்னிட்டு குறித்த மாணவனின் உயிரிழப்பு மற்றும் அவன் தொடர்பிலும் புலனாய்வாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்காது!- எம்.கே.சிவாஜிலிங்கம்

ad

ad