-

23 டிச., 2015

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நெரிசல்; 30 பக்தர்கள் காயம்


தற்போதைய சீசனை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள்.
நேற்று சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 10 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர். திடீரென அவர்கள் கோவிலுக்குள் முண்டியடித்துச் செல்ல முயன்றபோது, நெரிசல் ஏற்பட்டது.
அதில் சிக்கி பலர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். சுமார் 30 பக்தர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சபரிமலையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ad

ad