தென் பிராந்திய இங்கிரிய நகரில் காலணி விற்பனை நிலையத்தில், பணத்தை களவாடியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், மேலும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர், தொடர்பாக 9 வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பெண், தமது மகளை பயன்படுத்தி, ஹொரண இங்கிரிய நகரில் உள்ள பாதணி விற்பனை நிலையம் ஒன்றில் பணத்தை திருடியமை தொடர்பான பதிவுகள், பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளன.
இதன்போது, சுமார் 55 ஆயிரம் ரூபா திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் குறித்த பெண் மற்றும் இரண்டு பிள்ளைகளும் பொலிஸ் தடுப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெரா காட்சிகள் ஊடகங்களில் வெளியானதை அடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.