புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2015

ஐ.நா வின் ஜுன் மாத நிகழ்ச்சி நிரலில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம்
உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போர்க் குற்றம் உள்ளிட்ட மனித உரிமை மீறல் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பான பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்னும் உறுதியான வடிவத்தை வெளியிடாததினால் இந்த விடயம் குறித்த நிகழ்ச்சி நிரலில் காணப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் வருடாந்த வரைவு வேலைத்திட்டத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெறவுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இம்மாநாட்டின் 30ஆவது அமர்வில் நிறைவேற்றப்பட்ட ஸ்ரீலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் அமுலாக்கம் தொடர்பான மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வாய்மூல மேம்படுத்தல் விளக்கமளிப்பு இடம்பெறவருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அதன் பரிந்துரைகளின் அமுலாக்கம் தொடர்பில் 32ஆவது அமர்வில் வாய்மூல மேம்படுத்தல் தெளிவுபடுத்தல் ஒன்றையும், 34ஆவது அமர்வில் விரிவான அறிக்கை ஒன்றையும் சமர்பிக்குமாறு மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் கோரப்பட்டுள்ளது.
அதன் பிரகாரமே எதிர்வரும் ஜுன் மாதம் அமர்வில் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளகப் பொறிமுறை உருவாக்கப்பட்டு மார்ச் மாதமளவில் அதனை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜாக்ச அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வு அடுத்த ஜுன் 13ஆம் திகதி தொடக்கம் ஜுலை முதலாம் திகதிவரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad