புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2015

1000 டன்களை தொடும் இந்தியாவின் தங்க இறக்குமதி

தங்கத்தின் விலை சர்வதேச அளவில் கணிசமான அளவுக்கு சரிந்துள்ளது. உலகிலேயே தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி
செய்யும் 2-வது நாடாக இந்தியா உள்ளது. 2014-ம் ஆண்டில் மட்டும் 900 டன்கள் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் தங்க இறக்குமதி 11 சதவீதம் வரை அதிகரிக்கும் என அகில இந்திய நகை வியாபார கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

“2015-ம் ஆண்டில் தங்க இறக்குமதி 1,000 டன்களை தொடும். சர்வதேச அளவில் விலை குறைந்திருப்பதால் இறக்குமதி அதிகரிக்கும். இந்த ஆண்டு மட்டும் கடத்தலின் வாயிலாக இந்தியாவில் 100 டன்கள் அளவுக்கு தங்கம் இறக்குமதியாகியுள்ளது. ஏற்கனவே, இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டங்களில் 850 டன்கள் தங்கம் இறக்குமதி ஆகியுள்ளது. இதுவே சென்ற ஆண்டு 650 டன்களாக இருந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சர்வதேச கோல்டு கவுன்சில் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை இம்மாதம் பெரிய அளவில் இருக்காது என்று தெரிவித்துள்ளது.

பெட்ரோலுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருளாக தங்கம் உள்ளது. அளவுக்கு அதிகமாக தங்கம் இறக்குமதியானால் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ad

ad