புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2015

யுத்த மீறல்கள் தொடர்பில் வெளியிடவிருந்த 58 பேரின் பெயர் விபரங்களை மைத்திரி தடுத்தார்

அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்த சிலர் ஸ்ரீலங்கா அமெரிக்காவின் “கொலனி“யாக மாறிவருதாக தவறான கருத்துகளை
பரப்பி வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மட்டுமல்ல சர்வதேச ரீதியாக அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பு ஸ்ரீலங்காவிற்கு தேவையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிந்து நின்ற மனித உரிமைகள் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள், மற்றும் பல நாடுகள் தற்போது இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டிற்கு எதிராக மிகப்பெரிய ஆபத்து காத்திருந்தாகவும், யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் இராணுவ உறுப்பினர்கள் உள்ளிட்ட 58 பேரின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படுவதற்கு தயாராக இருந்தாகவும், எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளால் அந்த ஆபத்தை நூற்றிற்கு 90 வீதமாக குறைத்துக்கொள்ள முடிந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஆரம்ப கட்டமே எனவும் அந்த வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அமெரிக்கா உள்ளிட்ட மேலைத்தேய நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை யுத்தம் செய்து தோற்கடித்ததால், அமெரிக்காவையும் அவ்வாறு யுத்தம் செய்து தோற்கடித்து விடலாம் என சில அரசியல்வாதிகள் கருதுவதாகவும், எனினும் அது தவறு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad