நாம் யாழ்ப்பாணம் வந்து இருக்காவிடின் யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் போல் பேரும் அழிவை சந்தித்து இருக்கும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே இதனை தெரிவித்தார்.
எமது கட்சியின் கொள்கை கொலை, கொள்ளை, கடத்தல் மற்றும் சமூக விரோத செயல்களில் என்பவற்றில் ஈடுபடுவது இல்லை அவ்வாறு எமது கட்சியின் கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கைகளை மீறியவர்களை நாம் எமது கட்சியில் இருந்து நீக்கி இருந்தோம் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைக்கு மேற்கொள்ள தடையாக நாம் இருக்க வில்லை.
முன்னாள் மாகாண சபை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் மற்றும் மாநகர சபை உறுப்பினராக இருந்தவர்கள் கட்சி கொள்கைகளை மீறியமைக்காக கட்சியில் இருந்து அவர்களை நீக்கி இருந்தோம்.
நான் அரசியலில் இருப்பது ஆரம்பத்தில் தமிழ் மக்களின் உரிமைக்காக் ஆயுதம் ஏந்தி போராடியவன் என்ற ரீதியிலையே . கடலில் தத்தளிக்கும் எமது இன மக்களை கரை சேர்ப்பதற்காகவே .
யாழ்ப்பாணத்தை இராணுவத்தினர் கைப்பற்றிய பின்னர், மக்கள் யாழில் மீள் குடியேற ஆரம்பித்தவுடன் நாங்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து இருக்காவிடின் யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் போல் ஆகி இருக்கும்.
யாழ்ப்பாணம் வந்த நாங்கள் தியட்டரில் அலுவலகம் அமைத்ததற்கான காரணம் மக்கள் சந்திப்புக்களை மேற்கொள்ளவே. தினமும் நூறு தொடக்கம் ஆயிரம் பேர் வரையில் என்னை சந்திக்க வருவார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு வசதியாக ஒரு இடமாக தியட்டரே இருந்து. இருபத்தி நான்கு மணிநேரமும் மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்பதற்காகவே எனது அலுவலகத்தையும், எனது தங்குமிடத்தையும் தியட்டரில் வைத்து இருந்தேன்.