புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2016

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ் சதம்

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ் சதம் அடித்தனர்.

இருவர் சதம்

ஆஸ்திரேலியா- இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 355 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஸ்டீவன் சுமித் 61 ரன்களுடனும், ஷான் மார்ஷ் 64 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3-வது நாளான நேற்று உணவு இடை வேளை வரை ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் நீடித்தது. அபாரமாக ஆடிய ஷான் மார்ஷ் 4-வது சதத்தையும், கேப்டன் ஸ்டீவன் சுமித் 15-வது சதத்தையும் பூர்த்தி செய்தனர். அணியின் ஸ்கோர் 267 ரன்களை எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. ஷான் மார்ஷ் 130 ரன்களில் (281 பந்து, 19 பவுண்டரி) கிளன் போல்டு ஆனார். சிறிது நேரத்தில் ஸ்டீவன் சுமித் 119 ரன்களில் (218 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார்.

ஆஸ்திரேலியா 379 ரன்

இதன் பின்னர் ஹெராத்தின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியினர் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு கட்டத்தில் 450 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 379 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்வரிசையில் மிட்செல் மார்ஷ் (53 ரன்) மட்டும் குறிப்பிடும்படி ஆடினார். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

அடுத்து 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்துள்ளது.இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ் சதம்

ad

ad