புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2016

தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் – கூட்டமைப்பு

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கியமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் விடையத்தில்
அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பங்களிப்பு அவசியம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ் மாவட்டத்திற்கு இன்று விஜயம்  ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர்  அத்துல் கேஷாப் தலைமையிலான குழுவினருக்கும், இரா.சம்பந்தன் தலைலமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா விமானப்படையினரின் சீ.120 விமானத்தில் பலாலி விமான நிலையத்திற்கு சென்றடைந்த விஜயம்  ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர்  அத்துல் கேஷாப் தலைமையிலான குழுவினரை எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வரவேற்றனர்.
செங்கம்பல வரவேற்பு அளிக்கப்பட்ட இந்த நிகழ்வில் தேசிய நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கனேசன், சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கலாநிதி கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதனையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் அமெரிக்கத் தூதுவர் தலைமையிலான குழுவினர் விசேட சந்திப்பொன்றை நடாத்தினர். இதன்போது தமிழ் மக்களின் தற்போதைய நிலமைகள் ஜெனீவாத் தீர்மானத்தை அமுல்படுத்துவதில் இருக்கும் தாமதங்கள் அரசியல் தீர்வு முயற்சிகள் காணாமல்போனோர் அலுவலகம் இராணுவ பிரச்சனம் மீள்குடியேற்றம் ஆகிய முக்கிய விடையங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று மாலை யாழ்.நகரில் அமைந்துள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரையும் சந்தித் அமெரிக்கத் தூதுவர் தலைமையிலான குழுவினர் வடக்கின் நிலமைகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேஷாப், “நான் யாழ்ப்பாணத்திற்கு பல தடவைகள் விஜயம்செய்திருக்கின்றேன். இந்த ஒவ்வொரு பயணங்களின் போதும் கடந்த போர்காலத்தில் இடம்பெற்ற கொடூரமான சம்பவங்கள் தொடர்பில் பல தகவல்களை கேள்வியுற்றிருக்கின்றேன்.
உண்மையை கண்டறிதல், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பவை மிகவும் முக்கியமானவை. இவை இன்றி கடந்தகாலங்களில் இடம்பெற்ற கொடூரங்களை மறந்து மக்கள் நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் சமாதானத்துடனும் வாழ முடியாது.
எவ்வாறாயினும் இந்தத் தீவிற்கு கடந்தகால சம்பவகளை நினைவுகூர்ந்து கொண்டு எதிர்காலம் குறித்து சிந்தித்து செயற்படுவதற்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றார்.
இந்த சந்திப்புகளுக்கு முன்னதாக அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணத்தில் மருத்துவ முகாம்களை செய்வதற்காக அங்கு சென்றுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பிரிவின் பசுபிக் ஏஞ்சல் நிகழ்ச்சி திட்ட அமெரிக்க விமானப்படையினரை அறிமுகப்படுத்தினார்.
இதனையடுத்து இன்று காலை 10 மணிக்கு அச்சுவேலி- இடைக்காடு பகுதியில் அமெரிக்க விமானப்படையும்,  ஸ்ரீலங்கா விமானப்படையும் இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய இந்த மருத்துவ முகாம் இன்று முதல்  17 ஆம் திகதி வரையில் இடைக்காடு மகாவித்தியாலயத்திலும், 19 ஆம், 20ம் திகதிகளில் புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளீர் வித்தியாலயத்திலும் இடம்பெறவுள்ளன.

ad

ad