-

16 ஆக., 2016

சந்திரிக்காவிற்கு சட்டத்தரணி ஊடாக கோட்டாபய கடிதம்

நற்பெயருக்கு களங்கம் விளைவித்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு முன்னாள்
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கம்மன்பில, தற்போதைய அரசாங்கம் கோட்டாபயவிற்கு எதிராக செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகவிலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் சுமார் ஒரு மாதமாக ஒன்பது இராணுவ வீரர்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கோட்டாபயவிற்கு எதிராக வாக்குமூலம் பெறுவதற்கே இவ்வாறான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு இதுவரையில் வெற்றிகிடைக்கவில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
வாசீம் தாஜுடீனின் கொலைக்கு கோட்டாபய ராஜபக்சவே காரணம் என குற்றஞ்சாட்டும் வரை முன்னாள் மூத்த பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க விடுவிக்கப்பட மாட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ad

ad