புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2016

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் இடம்­பெறும் கைது நட­வ­டிக்­கைகள் நிறுத்­தப்­ப­ட ­வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­ய­கத்­தினால் இலங்கை அர­சாங்­கத்தின் இணக்­கப்­பாட்­டுடன் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில்
பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை நீக்­க­வேண்டும் என கூறப்­பட்­டுள்­ளது. எனவே அதனை நடை­மு­றைப்­ப­டுத்த அமெ­ரிக்கா நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்டும் என இலங்கை மற்றும் மாலை­தீ­வுக்­கான அமெ­ரிக்­காவின் தூதுவர் அத்துல் கேஷாப்­பிடம் வட­மா­காண சபை கோரிக்கை விடுத்­துள்­ளது.
நேற்­றைய தினம் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த அமெ­ரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் தலை­மை­யி­லான குழு­வினர் நேற்று மாலை 3 மணி­ய­ளவில் கைத­டியில் அமைந்­துள்ள பேரவை செய­ல­கத்தில் வட­மா­காண சபையின் பேரவை தலைவர் மற்றும் உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ருடன் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தனர். இந்­நி­லையில் இக் கலந்­து­ரை­யாடல் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­து­கை­யி­லேயே பேரவை தலைவர் சீ.வி.கே. சிவ­ஞானம் மேற்­கண்ட விட­யத்தை தெரி­வித்­தி­ருந்தார்.
இக் கலந்­து­ரை­யாடல் தொடர்­பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
இக் கலந்­து­ரை­யா­டலில் பிர­தா­ன­மாக இரு விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருந்தோம். குறிப்­பாக இலங்கை அர­சாங்­கத்தில் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு முயற்­சியில் தமிழ் மக்­க­ளு­டைய எதிர்­பார்ப்­புக்கள் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும். அத­ன­டிப்­ப­டையில் தீர்வும் தமிழ் மக்கள் எதிர்­பார்ப்பை நிறை­வேற்­று­வ­தாக அமைய வேண்டும் என்­பதை குறிப்­பிட்­டி­ருந்தோம்.
அதே­போன்று ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­ய­கத்­தினால் இலங்கை அர­சாங்­கத்தின் இணக்­கப்­பாட்­டுடன் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னத்தில் பயங்­க­ர­வாத தடை சட்டம் நீக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தி­யி­ருந்தோம்.
மேலும் இந்த சட்­டத்தின் கீழான கைது நட­வ­டிக்­கைகள் தொடர்ந்த வண்­ணமே உள்­ளன. உதா­ர­ண­மாக தற்­போதும் முன்னாள் போரா­ளிகள் கைது செய்­யப்­ப­டு­கின்­றார்கள். இவ்­வா­றான சம்­ப­வங்கள் நிறுத்­தப்­ப­ட­வேண்டும். அர­சாங்கம் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு மாற்­றாக ஒரு சட்­டத்தை உரு­வாக்க முயற்­சிக்­கலாம். ஆனால் முதலில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் இடம்­பெறும் கைது நட­வ­டிக்­கைகள் நிறுத்­தப்­ப­ட­வேண்டும்.
ஐ.நா.தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தற்கு முன்­னின்று உழைத்த நாடு என்ற வகையில் தீர்­மா­னத்தில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­களை நிறை­வேற்­றவும் அமெ­ரிக்கா நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.
தற்போதும் வடக்கில் இடம்பெறுகின்ற திட்டமிட்ட வகையிலான இராணுவத்தி னருக்கான நில அபகரிப்புக்கள் மற்றும் மீள்குடியேற்றத்திற்கான தடைகள் தொடர் பாகவும் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் தூதுவரிடம் கோரிக்கையாக முன்வைத்தோம் என்றார்.

ad

ad