புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2016

ஐ.நா.சபையில் ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை கச்சேரி 3 மணி நேரம் நடந்தது

இந்தியாவின் 70-வது சுதந்திரதினத்தையட்டி ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகம் சார்பில் நேற்று  நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுச்சபை அரங்கில் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை கச்சேரி நடந்தது.

இதில், 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.நா. சபையால் அழைக்கப்பட்டு கர்நாடக இசை கச்சேரி நடத்திய முதல் இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்ற எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டது.

ஏ.ஆர். ரகுமான் கச்சேரிக்காக மேடை ஏறியபோது பார்வையாளர்கள் வரிசையில் இருந்த பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், இந்திய&அமெரிக்கர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். இதைத்தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் தனது இசைக்குழுவினருடன் கச்சேரி நடத்திய அவர் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக தனது ‘ஜெய் ஹோ‘ பாடல், சுபி பாடல்கள் மற்றும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாடல்களுக்கு இசையமைத்தார். ஏ.ஆர்.ரகுமானின் 2 சகோதரிகளும், பிரபல பாடகர் ஜாவித் அலியுடன் இணைந்து பாடினர். ‘டிரம்ஸ்‘ சிவமணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டிரம்ஸ் வாசித்தார்.

இதன் மூலம் எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு பிறகு, இந்தியாவின் சார்பில் ஐ.நா.வில் இன்னிசை கச்சேரி நடத்திய 2-வது இந்தியர் என்ற பெருமையும் ஏ.ஆர்.ரகுமானுக்கு- கிடைத்து உள்ளது.

ad

ad