புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2016

அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் சிவஞானம் தெரிவிப்பு

இலங்கை வந்தடைந்த இலங்கைக்கான அமெரிக்க துாதுவர் வடமாகாண சபை உறுப்பினர்களை சந்தித்து இலங்கையின் சமகால நிலை பற்றி முக்கிய பேச்சு வார்தை ஒன்றை நடாத்தினார்.

இச் சந்திப்பு குறித்து மேலும் தெரிய வருவதாவது

பலாலியை நேற்றுக்காலை வந்தடைந்த இலங்கைக்கான அமெரிக்க  துாதுவர் அதுல் கேகாப் நேற்று 
மாலை 3.15 மணியளவில் வடமாகாண சபை உறுப்பினர்களை சந்தித்தார். இச்சந்திப்பு கைதடியில் 
அமைந்துள்ள பேரவை செயலகத்தில் இடம் பெற்றது.

வடமாகாண சபை உறுப்பினர்கள் சார்பாக 
அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ப.சத்தியலிங்கம் எதிர்கட்சித் தலைவர் தவராசா சிவாஜிலிங்கம் இ. ஆனால்ட் சர்வேவரன் ஆனந்தி சசிதரன்  போன்றோர் கலந்து கொண்டனர். 

இச் சந்திப்பைக் குறித்து அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் கருத்துத் தெரிவிக்கையில்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக கூறப்பட்ட போதிலும் இன்று வரை அது நீக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியதோடு முன்னா போராளிகளை கைது செய்யும் நடவேடிக்கை உடன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியவர் விகாரை அமைத்தல் சிங்கள குடியேற்றங்கள் போன்றவற்றிற்கும அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.  

ad

ad