புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2016

சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசி எறிந்த அன்ரனி ஜெகநாதன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது, வட மாகாணசபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன், ஒலிவாங்கியை
வீசி எறிந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் வவுனியாவில் நடந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சாந்தி சிறீஸ்கந்தராசாவை, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமை குறித்து, கட்சித் தலைமைக்கு எதிராக, அன்ரனி ஜெகநாதன் கடுமையான விமர்சனங்களை இந்தக் கூட்டத்தில் முன்வைத்திருந்தார்.
தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் பொருத்தமானவர் என்பதே கட்சி உறுப்பினர்களின் கருத்து என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதனைக் கண்டித்த இரா. சம்பந்தன், அன்ரனி ஜெகநாதனை ஆசனத்தில் அமருமாறு பணித்தார்.
அப்போது, ஆத்திரமடைந்த அன்ரனி ஜெகநாதன் ஒலிவாங்கியைப் பிடுங்கி இரா. சம்பந்தன் மீது வீசி எறிந்தார்.
எனினும், இந்தச் சம்பவத்தில் சம்பந்தனுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது..

ad

ad