புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2016

ஒலிம்பிக் போட்டி கூடைப்பந்து அரங்கத்தி பெரிய கேமிரா விழுந்து 7 பேர் படுகாயம்

ரியோ ஒலிம்பிக் பூங்காவில், கம்பிவடங்கள் அறுந்ததால் பெரிய கேமரா ஒன்று விழுந்தது. இதில்  7 பேர் காயமடைந்துள்ளனர்.
உயரத்தில் இருந்து காட்சிகளை எடுக்கக்கூடிய 'ஸ்பைடர்கேம்' எனப்படும் அந்த கேமரா, நேற்று கூடைப்பந்து அரங்கத்தின் வெளியே 20 மீட்டர் உயரத்திலிருந்து திடீரென விழுந்தது. இதில் 2 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்

கேமராவின் எடையைக் கம்பிவடங்களால் இனி தாங்க இயலாது என்பதை அறிந்த்  ஒலிம்பிக் ஒளிபரப்பு சேவை குழு  கேமராவைத் தாங்கி பிடித்த கம்பிவடத்தை வலுப்படுத்தும் முயற்சிலும், அந்தப் பகுதியிலிருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்ததாக அந்தக் குழு கூறியது.

காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த விசாரணை நடைபெறுகிறது. ரியோ ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து உலுக்கும் இந்த சம்பவமும் ஒன்று.

ad

ad