புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2012

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பில் நடைபெற்றமுஸ்லிம் காங்கிரஸ்  கூட்டம் எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாத நிலையில் மீண்டும் நாளை கூடுவதென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற கூட்டம் எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாத நிலையில்

கிழக்கு மாகாண சபைக்கு அண்மையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களின் வீடுகளுக்கு நேற்றிரவு சென்ற சிலர் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என அச்சுறுத்தியுள்ளனர்.  

மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு கொழும்பிலிருந்து ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்திருக்கிறோம் என கூறிக்கொண்டு சிலர் சென்றுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்தவர்களால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை அடுத்து கிழக்கு மாகாணசபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தெரிவுசெய்யப்பட்ட 11 உறுப்பினர்களும் திருகோணமலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான அவசர கூட்டம் இன்று இரவு திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. ஆர்.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ்

மோசடிகள் இடம்பெறாவிட்டால் த.தே.கூ. 12 ஆசனங்களை பெற்றிருப்போம்- சம்பந்தன்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பலம் வாய்ந்த ஆணையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தந்துள்ளனர். தமிழ் மக்கள் வழங்கிய ஜனாநாயகத் தீர்ப்புக்கு போதுமான மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். தவறினால் அதிகாரப்பகிர்வு மற்றும் ஜனநாயக நடைமுறையில்
அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட மேலும் 53 பேர் திருகோணமலையில் கைது
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட 53 பேர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை ஒன்று ஐக்கிய அமெரிக்க பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையின்படி இலங்கையின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்க பாராளுமன்றில் விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழீழ விடுதலைப் புலிகளினால் வவுனியா பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்ட பணம் 20 கோடி ரூபா பணம்  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பணத்தையும் ஆயுதங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

கொழும்பு, ஹவலொக் டவுனில் நிறுத்தி வைக்கப்பட்ட காரொன்றிலிருந்து சடலமொன்றை கண்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று மாலை 5 மணியளவில் எமக்கும் கிடைத்த தகவலொன்றின்படி கொழும்பு, ஹவலொக் டவுனில் அமைந்துள்ள தனியார் சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற காரொன்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தை கண்டெடுத்தோம்.


தொழில் பறிபோனாலும் தொழிற்சங்கப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 
முடிந்தால் தம்மை பணி நீக்கம் செய்து பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சவால் விடுத்துள்ளனர்
கடைசி டி20: ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது நியூசிலாந்து
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில், நியூசிலாந்து அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜனாதிபதி மகிந்த, பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் ஆகியோரை எதிர்வரும் 20ம் திகதி சந்திப்பார்: பீரிஸ்
இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இந்திய புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

11 செப்., 2012

அரசாங்கத்துடன் இணைந்து மு.கா. கிழக்கில்ஆட்சியமைத்தால் அது முஸ்லிம் சமூகத்துக்கு செய்யும் துரோகம்: அசாத்சாலி
அரசாங்கத்தோடு இணைந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைக்குமென்றால் அது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும் ௭ன முன்னாள் கொழும்பு மாநகரசபை பிரதி மேயரும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட வேட்பாளருமான
கிழக்கில் மு.கா.வுடன் இணைந்து ஆட்சி: அரசாங்கம் அறிவிப்பு
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் உடன் இணைந்து ஆளும் கட்சி ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் யார் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாற இறுதியில் அறிவிப்பார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழோசையின் முன்னாள் துறைப் பொறுப்பாளரும் பிரபல ஒலிபரப்பாளருமான ஷங்கரன் சங்கரமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
அந்தக் கம்பீரமான குரலை தமிழோசையின் நீண்ட நாள் நேயர்கள் மறந்திருக்க முடியாது.
சுமார் இரண்டரை தசாப்தங்கள் தமிழோசை மூலமாக வானலைகளில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்தும் தமிழோசையைக் கேட்டு வந்த அந்தக்கால நேயர்களை மயக்கிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்துவிட்டார்.

10 செப்., 2012


கிழக்கு தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்கள் திட்டமிட்டு குறைக்கப்பட்டதாக கசிந்துள்ள தகவல்!
நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பே 15 ஆசனத்தை பெற்று அதிகப்படியாக திகழ இருந்தது. இதனை தடுத்து நிறுத்தும் நோக்குடன் ஜனாதிபதியின் அறிவித்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் குறைக்கப்பட்டது.

கிராமம் முன்னேற சன சமூக நிலையங்கள் தேவை: புங்குடுதீவில் துரை கணேசலிங்கம் தெரிவிப்பு
 புங்குடுதீவு அனைத்துலக ஒன்றியங்களின் ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் செயலாளர் நாயகமுமான துரை கணேசலிங்கம் அவர்கள் புங்குடுதீவு ஐங்கரன் சனசமூக நிலையத்தை திறந்து வைத்தார்.

கிழக்கில் ஆட்சி அதிகாரத்தை தருக!-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை
இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை இரண்டு கட்சிகளும் நேற்று மாலை கிழக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தமது தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் உத்தியோகபூர்வமாக கோரியுள்ளன.

கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதம் ஆளுனரிடம் கையளிக்கப்படும்: மாவை சேனாதிராசா
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து நேரில் கையளிக்கவிருக்கின்றது.

கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதம் ஆளுனரிடம் கையளிக்கப்படும்: மாவை சேனாதிராசா
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து நேரில் கையளிக்கவிருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்குமாறு முஸ்லிம் புத்திஜீவிகள் பலரும் முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு வேண்டுகோள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை பெறுமாறும் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் புத்திஜீவிகள் பலரும் முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ad

ad