புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 செப்., 2012

கிழக்கில் மு.கா.வுடன் இணைந்து ஆட்சி: அரசாங்கம் அறிவிப்பு
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் உடன் இணைந்து ஆளும் கட்சி ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் யார் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாற இறுதியில் அறிவிப்பார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறுகையில்,
தனித்துப் போட்டியிட்டாலும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்தே கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தையை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்ளுடன் மேற்கொள்ளப்பட்டு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று மாகாண சபைகளுக்குமான வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விபரங்கள் நாளை வர்த்தமானியில் வெளியாகவுள்ளது. இதன்பின்னர் முழுமையான அறிவிப்பை அரசாங்கம் வெளியிடும் என அவர் தெரிவித்தார்.

ad

ad