புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2012

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பில் நடைபெற்றமுஸ்லிம் காங்கிரஸ்  கூட்டம் எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாத நிலையில் மீண்டும் நாளை கூடுவதென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற கூட்டம் எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாத நிலையில்
மீண்டும் நாளை கூடுவதென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று இரவுவரை இக்கூட்டம் நடைபெற்றது. கொழும்பு ஹொட்டல் ஒன்றில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துரையாடலில் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கட்சி உறுப்பினர்கள், மார்க்க அறிஞர்கள் (உலமாக்கள்) ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சுமார் 75வீதமானவர்கள் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஒருவரை முஸ்லீம் காங்கிரஷ் நியமிக்க வேண்டும் என்றும் கோரினர். மாகாணசபையில் காணி கல்வி அமைச்சுக்கள் முஸ்லீம் காங்கிரஷிற்கு வழங்க வேண்டும் என அரசாங்கத்திற்கு நிபந்தனை வழங்க வேண்டும் என கோரினர்.
இதேவேளை கலந்து கொண்டவர்களில் 25வீதமானவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதால் கிழக்கில் தமிழ் முஸ்லீம் உறவை கட்டி வளர்க்க முடியும் என்றும் கிழக்கில் முஸ்லீம்கள் தமிழர்களை பகைத்துக்கொண்டும் தமிழர்கள் முஸ்லீம்களை பகைத்து கொண்டும் வாழ முடியாது. எனவே நல்லுறவை வளர்த்துக்கொள்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என கட்சியின் செயலாளர் ஹசன் அலி போன்றவர்கள் கருத்து தெரிவித்ததாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் முக்கியஸ்தர் ஒருவர் தினக்கதிருக்கு தெரிவித்தார்.
இது தொடர்பான இறுதி முடிவை எடுப்பதற்காக நாளை காலை 9 மணிக்கு கூடுவதென ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் முடிவெடுத்துள்ளது.

ad

ad