புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2013

 இலங்கையின் அரசியலமைப்பை வடக்கு முதலமைச்சர் மீறியுள்ளார்: என்கிறது ஜே.வி.பி 
வடக்கு முதலமைச்சருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கையின் தேசியக்கொடி வைக்கப்படாமை குறித்து ஜாதிக ஹெல உறுமய கேள்வி
12வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்: தியாகு உடல்நிலை பாதிப்பு

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ளக்கூடாது என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை வள்ளு வர் கோட்டம் அருகே கடந்த 1–ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் கே.தியாகராஜன் என்ற தியாகு ஈடுபட்டார்.
கடந்த 7–ந்தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, வலுக்கட்டாயமாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கேயும் சிகிச்சை பெற மறுத்து, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்.
கடந்த 5 நாட்கள் ஆஸ்பத்திரியில் உண்ணாவிரதம் இருந்த தியாகு,  அங்கிருந்து வெளியேறினார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள டாக்டர் வாசுதேவன் சாலையில், மக்கள் கல்வி மாமன்றம் அமைப்பின் அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
கடந்த 12 நாட்களாக தியாகு தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால், அவரது உடல்நலம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தன்னுடைய கோரிக்கைகள் நிறைவேறும்வரை தன்னுடைய போராட்டத்தை கைவிட முடியாது என்று தியாகு கூறினார்.

திரைப்படக் கல்லூரிக்கு புதிய விடுதி வசதி: ஜெ., உத்தரவு
சென்னையில் உள்ள திரைப்படக் கல்லூரிக்கு விடுதி வசதியை ஏற்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். புதிய பாடப் பிரிவுகள் மற்றும் மாணவர்களின் சேர்க்கை
“இது இல்லை எனில் எது இனப்படுகொலை”?- புகழேந்தியின் நூல் வெளியீட்டு விழா நாளை சென்னையில்.
இது இல்லை எனில் எது இனப்படுகொலை? புகழேந்தி தங்கராஜின் நூல் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெறுகின்றது. தமிழக அரசியல் வார இதழ்களில் இயக்குனர் புகழேந்தி அண்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலாக இது வெளியிடப்படுகின்றது.
ஆயுதப் போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்த முடியாது!- தயா மாஸ்டர்
தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததொன்று, அதனை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நேற்று சனிக்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ மற்றும் புளொட்  ஆகியவற்றின் உறுப்பினர்கள்  கலந்துகொண்ட ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.
கிழக்கிற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை கொண்டுவர தமிழ் கூட்டமைப்பு எத்தனிப்பது பகல்கனவு!- அருண் தம்பிமுத்து
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனால் கிழக்கிற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை கொண்டுவர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தனித்தால் அது அவர்கள் காணும் ஒரு பகல்கனவாகத்தான் இருக்கு முடியும்.
என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத்
கல்முனையில் பாழடைந்த கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு
கல்முனை பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து இன்று சனிக்கிழமை மாலை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
நய்யாண்டி - விமர்சனம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் சற்குணம், நடிகர் தனுஷ் இருவரும் கைகோர்த்திருக்கும் படம் நய்யாண்டி.
hari_anandasankariஹரி ஆனந்தசங்கரி அவர்கள் கனடாவின் ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
எனது முன்னைய அறிவிப்பிற்கு கிடைத்துள்ள அமோக ஆதரவு எனக்கு பெரு மகிழ்ச்சியை அளித்திருக்கின்றது.

கனேடிய லிபரல் கட்சி வேட்பாளருக்கான தேர்வில் களமிறங்கும் கவுன்சிலர் லோகன் கணபதி

எதிர் வரும் கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்காபரோ வடக்கு என்ற புதிய தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளருக்கான தேர்வில்

புதிய ஸ்காபுறோ வடக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்த றாதிகா சிற்சபைஈசன்

கனடாவின் “ஸ்காபுறோ றூஜ் றிவர் தொகுதியில் வாக்காளப் பெருமக்களாகிய உங்களது ஆதரவுடன் 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றியீட்டிய நான் தொடர்ந்தும் உங்களுக்கு
சகலகலாவல்லி மாலை 
குமரகுருபர சுவாமிகள் கலைமகளை வேண்டியப் தமிழில் பாடிய பாமாலை ஆகும். குமரகுருபர சுவாமிகள் தனது ஞான தேசிகரான தருமபுர ஆதீன நான்காவது குருமுதல்வராக விளங்கிய ஸ்ரீமாசிலாமணி

12 அக்., 2013

அரசியலில் நுழைவது பணம் சம்பாதிப்பதற்கல்ல: விக்னேஸ்வரன்- துயிலுமில்லங்களில் விரைவில் பூப்போடுவோம்: சிறீதரன் எம்பி- பதவியேற்பு விழாவில் முழக்கம்
அரசியலில் நுழைவது பணம் சம்பாதிப்பதற்கும் பந்தா காட்டுவதற்கும் என்றிருந்த காலம் இனி மாற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை பேணத் தவறியுள்ளது: நிகழ்வைப் புறக்கணித்தமைக்கான காரணம் கூறும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ
வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வினை புறக்கணித்தமைக்கு பதவி அங்கலாய்ப்பே காரணம் என எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் மக்களுடைய உணர்வுகளை மதிக்கவும், உட்கட்சி ஜனநாயகத்தை பேணவும்
இலங்கையின் இறுதிப்போரில் ஐ.நா தோல்வி: உள்ளக இறுதி அறிக்கையை அதிரடியாக வெளியிட்டது இன்னர் சிட்டி பிரஸ
இலங்கையின் இறுதிப்போரின் ஐக்கிய நாடுகள் சபை தமது நடவடிக்கைகளில் தோல்விகண்டமை காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டனர். 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணைய கணணி வலைப்பின்னல் ஊடறுக்கப்பட்டது! சிங்களத்தின் சதி நடவடிக்கையா?
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணைய கணணி வலையம் விசமிகளால் ஊடறுக்கப்பட்டது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தல் எதிர்வரும்
அரசு பக்கம் தாவியுள்ள விஜயகலா எம்.பி. யாழ்.மாவட்ட அபிவிருத்தி அமைச்சராகிறார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள வடக்கு மாகாணசபையை வலுவிழக்கச் செய்யும்  வகையில் மாவட்ட ரீதியாக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சர்களை நியமிக்க மஹிந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அந்தவகையில் தற்போது அரசு பக்கம் தாவியிருக்கும் ஐ.தே.கவின்
தம்பிக்கு அமைச்சு பதவி இல்லாத காரணத்தினாலேயே சுரேஷ் பதவியேற்பு நிகழ்வை புறக்கணித்தார்: வட மாகாண முதலமைச்சர்
சுரேஷ் பிறேமச்சந்திரன் தனது சகோதரனான சர்வேஸ்வரனுக்கு அமைச்சு பதவி வழங்காத காரணத்தினாலேயே பதவியேற்பு நிகழ்வினை புறக்கணித்துள்ளார் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: நடுக்கடலில் சிக்கிய மர்ம கப்பல்: கப்பலில் இருந்தவர்கள் எங்கே? ஆயுதங்கள் இருந்ததா?
இந்திய கடலோர காவல்படை வீரர்கள் தமிழக கடல் பகுதியில் ‘‘அபிநவ்’ ரோந்து கப்பலில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது தூத்துக்குடி அருகே நடுக்கடலில் ஒரு பெரிய

வணக்கம் சென்னை படத்திற்கு வரி விலக்குஅளித்த அதிகாரி இடமாற்றம் ; உதயநிதிஸ்டாலின் வருத்தம்
 


தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வணக்கம் சென்னை. 

ad

ad