புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

12 அக்., 2013

அரசு பக்கம் தாவியுள்ள விஜயகலா எம்.பி. யாழ்.மாவட்ட அபிவிருத்தி அமைச்சராகிறார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள வடக்கு மாகாணசபையை வலுவிழக்கச் செய்யும்  வகையில் மாவட்ட ரீதியாக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சர்களை நியமிக்க மஹிந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அந்தவகையில் தற்போது அரசு பக்கம் தாவியிருக்கும் ஐ.தே.கவின்
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு யாழ்.மாவட்டத்திற்கான அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
ஏற்கனவே விஜயகலா மகேஸ்வரன் அரசு பக்கம் தாவியுள்ளமை தொடர்பாக ஐ.தே.கவின் நாடாளுமன்ற அங்கத்தவர் டி.எம்.சுவாமிநாதன் அண்மையில் அறிவித்திருந்தார்.
இதேவேளை வவுனியாவுக்கு ரெலோ சிறீ அமைப்பின் தலைவரான உதயகுமார் மாவட்ட அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ள போதிலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், ஜனாதிபதியைச் சந்தித்த போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையே வடக்கின் முக்கிய அமைச்சராக நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
அத்துடன்  வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனோடு அபிவிருத்தியின் இணைத் தலைவராக செயற்படுவார் எனவும்  தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மாவட்ட அபிவிருத்தி அமைச்சுப் பதவி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கா? விஜயகலா மகேஸ்வரனுக்கா? என்பதை பொறுத்திருந்து தான்  பார்க்க வேண்டும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.