13 அக்., 2013

“இது இல்லை எனில் எது இனப்படுகொலை”?- புகழேந்தியின் நூல் வெளியீட்டு விழா நாளை சென்னையில்.
இது இல்லை எனில் எது இனப்படுகொலை? புகழேந்தி தங்கராஜின் நூல் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெறுகின்றது. தமிழக அரசியல் வார இதழ்களில் இயக்குனர் புகழேந்தி அண்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலாக இது வெளியிடப்படுகின்றது.
இது இல்லை எனில் எது இனப்படுகொலை என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கும் நூல் நாளை திங்கள்கிழமை மாலை 5மணிக்கு சென்னையில் வெளியிடப்படுகின்றது.
இயக்குனர் ஆர்.சி.சக்தி தலைமையில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் ம.தி.மு.க. தலைவர் வைகோ அவர்கள் நூலை வெளியிடுகின்றார்.
புரட்சித் தமிழன் சத்தியராஜ் அவர்கள் நூலினைப் பெற்றுக்கொள்கின்றார்.
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நூலை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றுகின்றார்.
இந்நூல் வெளியீட்டு விழாவில், உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட விருதுகளை கலைஞர்களிற்கு வழங்கிக் கௌரவிக்கப்பட உள்ளது.