புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2013

கனேடிய லிபரல் கட்சி வேட்பாளருக்கான தேர்வில் களமிறங்கும் கவுன்சிலர் லோகன் கணபதி

எதிர் வரும் கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்காபரோ வடக்கு என்ற புதிய தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளருக்கான தேர்வில்
லோகன் கணபதி அவர்கள் போட்டியிடவுள்ளார்.
மார்க்கம் மாநகரில், கனேடியத் தமிழ்மக்களின் பேராதரவுடனும் ஒத்துழைப்புடனும் இரண்டு தடவைகள் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர்.
எம் மண்வாசனையை கொண்டு வந்து மாநகரசபை ஆட்சியில் ஓர் புதிய சகாப்தத்தை உண்டு பண்ணியவர்.
எம் உறவுகளின் தேவைகளை நிறைவு செய்ய இந்தப் புதிய தொகுதி வாய்ப்பைத் தரும் என்ற நோக்குடதான் இத்தேர்தலில், உங்கள் சார்பில், போட்டியிடுகிறார்.
ஏறக் குறைய முப்பது ஆண்டுகளாக ஸ்காபரோவிலும், மார்க்கத்திலும் வாழும் லோகன் கணபதி கனடா அரசியலுக்கு புதியவரல்ல.
1997ல் கல்விச் சபை உறுப்பினருக்கான தேர்தலில் ஸ்காபரோ றூச்சில் போட்டியிட்டு 2006 ம் ஆண்டு தொடக்கம் மார்க்கம் நகரசபையில் கவுன்சிலராக இருந்து வருகிறார்.
லிபரல் கட்சி வேட்பாளருக்கான தேர்வில் இருப்பது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த புதிய தொகுதி இன்னொரு சந்தப்பத்தை தமிழருக்கு தந்திருக்கின்றது. இந்த கனேடிய மண்ணில் எமது திறமையை வெளிப்ப்டுத்த, எமது மனிதாபிமானக் கொள்கையை எடுத்துக்காட்ட ஓர் அரிய சந்தர்ப்பமாகத்தான் இதைப்பார்க்கிறேன்.
அது மாத்திரமல்ல, மாந்கரசபை ஆட்சியில் இரண்டு தடவைகளாக பணிபுரிந்து பல்லின மக்கள் வாழும் கனடாவில், மனித உரிமை, ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்புக் கொடுக்கும் பூமியில், அதை ஆட்சி புரியும் நாடாளுமன்றத்தில் எனது பங்களிப்பு நிச்சயமாக பெருமை தரக் கூடியதாக அமையும் என்பதை நான் உங்களிடம் கூறுவதில் மகிழ்சியடைகிறேன்.
எனது வெற்றி தன்னலமின்றி மக்கள் நலன் பேண கடுமையாக உழைப்பவர்களின் வெற்றியாக அமையும்.
உங்கள் ஆதரவும், அன்பும் முன்பு போல் என்றும் இருக்கும் என நான் எண்ணுகிறேன். குறிப்பாக ஸ்காபரோ- வடக்கு (Scarborough-North) தொகுதியில் வாழ்பவர்கள் எனது இந்த முயற்சியை ஆதரித்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
மாநகர ஆட்சியில் நான் பெற்ற அனுபவமும் தன்னால் பெற்ற அறிவும் என் புதிய பயணத்திற்கு உதவியாகவும் ஊக்கமளிப்பதாகவும் அமையும் என்பது திண்ணம்.

ad

ad