புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2013

திரைப்படக் கல்லூரிக்கு புதிய விடுதி வசதி: ஜெ., உத்தரவு
சென்னையில் உள்ள திரைப்படக் கல்லூரிக்கு விடுதி வசதியை ஏற்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். புதிய பாடப் பிரிவுகள் மற்றும் மாணவர்களின் சேர்க்கை
எண்ணிக்கை உயர்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.


இது குறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தை திரைப்படத் துறையில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் மாற்றியமைப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் உள்ள "ப்ரிவியூ' திரையரங்கு நவீன வசதிகள் ஏதுமின்றி பழமையான திரையரங்காக இருந்தது. மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப திரையீடு செய்ய போதுமான வசதிகள் இந்தத் திரையரங்கில் இல்லை.
இதனால் இங்கு பயிலும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இதனையறிந்த முதல்வர் ஜெயலலிதா ரூ.99 லட்சத்தில் அந்தத் திரையரங்கை நவீன வசதிகளுடன் புனரமைக்க ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இந்த நிறுவனத்தின் திரையரங்கம் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங் கை மாறி வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப முழுமையாக பயன்படுத்திடும் வகையில் நவீனப்படுத்தி, திரைப்படங்களை உன்னத தரத்துடன் திரையிட்டுக் காட்டும் வகையில் தொடர் மின் வசதி மற்றும் அதி உயர் டிஜிட்டல் டால்பி, பார்கோ புரொஜக்டர் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளை வாங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதற்காக ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
விடுதி வசதி: திரைப்படக் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்காக 1984-ஆம் ஆண்டு 35 பேர் தங்கக் கூடிய விடுதி கட்டப்பட்டது. இந்த விடுதிக் கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளது.

மேலும், பயிற்சி நிறுவனத்தில் திரைப்படம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி பெற சேரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த விடுதியில் இடவசதியின்மை காரணமாகவும், புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படுவதால் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை 240 ஆக உயர்வதாலும் புதியதாக விடுதி கட்ட வேண்டியது அவசியமாகும்.
எனவே, 100 மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் வகையில் உணவகம், உணவருந்தும் இடம் மற்றும் வரவேற்பறை வசதியுடன் கூடிய புதிய மாணவர் விடுதியை கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு ள்ளார். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடும் அவர் செய்துள்ளார் என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad