புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2013


வணக்கம் சென்னை படத்திற்கு வரி விலக்குஅளித்த அதிகாரி இடமாற்றம் ; உதயநிதிஸ்டாலின் வருத்தம்
 


தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வணக்கம் சென்னை. 
இந்த படத்தில் சிவா, பிரியா ஆனந்த் மற்றும்  நடிகர் சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர்.


இந்த படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.  எனினும், படத்திற்கு வரி விலக்கு அளிக்கப் படவில்லை.  இதற்கு முன்னதாக ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் நீர் பறவை ஆகியவற்றிற்கும் இது போன்ற சிக்கல் ஏற்பட்டது.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வரி விலக்கு மறுக்கப்பட்டது எதிர்பார்த்த ஒன்று தான்.  வரி விலக்கு அளிப்பது தொடர்பாக கையெழுத்திட்ட அதிகாரி ஒருவர் இடமாறுதலுக்கு உள்ளானார்.


அந்த அதிகாரி வணக்கம் சென்னை படத்திற்கு வரி விலக்கு அளிப்பது தொடர்பாக ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டதற்காக இட மாறுதலுக்கு உள்ளாகி இருப்பதற்காக நாங்கள் மிக வருத்தப்படுகிறோம்.  நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று என்னவாக இருக்கும் என எனக்கு தெரியாது.
எனினும் அரசின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல் நான் ஓயப்போவதில்லை.  தமிழ் சினிமாவின் 100-வது வருடத்தை கொண்டாடி வருகிறோம்.  கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக ரெட் ஜெயண்ட் நிறுவனம் நீதிமன்றத்திற்கு செல்லும்.  நல்லதே நடக்கும் என நம்புகிறேன்’’ என தெரிவித்துள்ளார். 
வரி விலக்கு இல்லாமல் வணக்கம் சென்னை திரைப்படம் 210 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ad

ad