புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2013

 இலங்கையின் அரசியலமைப்பை வடக்கு முதலமைச்சர் மீறியுள்ளார்: என்கிறது ஜே.வி.பி 
வடக்கு முதலமைச்சருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கையின் தேசியக்கொடி வைக்கப்படாமை குறித்து ஜாதிக ஹெல உறுமய கேள்வி
எழுப்பியுள்ளது.

இந்த செயலின் மூலம், தாம் இலங்கையின் தேசியக் கொடியை புறக்கணிப்பதாக வடக்கு மாகாணசபை இந்தியாவுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கைக்கான உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் வடக்கிற்கான பயணத்தையும் மேற்கொண்டதுடன்  வடமாகாண முதலமைச்சருடனும் சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார். அதன்போது இந்திய கொடியும் வடக்கு மாகாண சபைக் கொடியும் வைக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து வடமாகாண கொடி அகற்றப்பட்டதுடன் தேசியக் கொடியும் வைக்கப்படவில்லை என்பது அனைவரும்  அறிந்ததே.

எனினும் வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன், இலங்கை ஜனாதிபதியின் முன்னால் சத்தியப் பிரமாணம் செய்தபோது இலங்கையின் அரசியலமைப்புக்கு எதிராக செயற்படமாட்டேன் என்று உறுதியளித்தார். இருப்பினும் அடுத்த சில மணித்தியாலங்களிலேயே அவர் அதனை புறக்கணித்துள்ளதாக வர்ணஸ்ரீ குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த செயலின் மூலம் இலங்கையில் தனிநாடு ஒன்றை இந்தியாவின் உதவியுடன் அமைப்பதற்கு விக்னேஸ்வரன் வழிகோலியுள்ளதாக வர்ணஸ்ரீ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad