பிரான்ஸில் இருந்து 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும்... ரி.ஆர்.ரி(T.R.T) தமிழ் ஒலி வானலைகளில்..
இன்று இரவு 10.30 மணிக்கு சுவிஸ் நேரத்தில் **அரசியல் சமூகமேடை**
நிகழ்ச்சியில் தமிழீழ மக்கள் விருதலை கழகம்[புளொட்] தலைவர்,முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர்,தற்போதய தமிழ்த்தேசிய கூட்மைப்பின் வடமாகாணசபை
உறுப்பினருமான கெளரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து
சிறப்பிக்கின்றார்.. உங்கள் கேள்விகள், கருத்துகளோடு இணைந்து கொள்ளுங்கள்... 0033148321540 http://tunein.com/radio/TRT-Tamil-Olli-s110752 www.trttamilolli.com
ஈ.பி.டி.பி யிலிருந்து பிரிந்து சென்ற விஜயகாந் ஆரம்பித்த கட்சியினரே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று கடவத்தை மாரவமண்டிய புது மாவத்தை சந்தியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் முச்சக்கவண்டி சாரதியும் 7 வயது சிறுமி ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.மேலும் நால்வர் காயமடைந்து நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
ஜனாதிபதியின் காரை வாங்கிய ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்தில் வரியை செலுத்தாதது ஏன்? நீதிபதி கேள்வி!
ஜனாதிபதியின் காரை வாங்கிய ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்தில் அதற்கான வரியை செலுத்தாதது ஏன் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
வெளியுறவு கொள்கையை மாற்றி அமைத்து, இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேரில் வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மக்கள் பிரச்சனைகளை எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்தாக தெரிவித்தனர்.
யாழில் கடற்படைச் சிப்பாயால் 11 வயது சிறுமி வல்லுறவு: சிறுமியின் பெற்றோருக்கு அச்சுறுத்தல்
யாழ்.காரைநகர் ஊரியான் கிராமத்தில் கடற்படைச் சிப்பாயினால் 11வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில்
153 இலங்கை அகதிகளும் கப்பலில் காற்றுப்புகாத அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்!- ஐ.நா அதிருப்தி
அவுஸ்திரேலிய கடற்படையிரால் இடைமறிக்கப்பட்ட படகில் இருந்த 153 இலங்கை அகதிகள், கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் உள்ள சுங்க கப்பல் ஒன்றில் பூட்டப்பட்ட கதவுகளுக்கு
பிரேசில் காற்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் பிலிப்பே ஸ்கொலறி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார் என பிரேசில் காற்பந்தாட்ட சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போரினால் நாம் பாதிக்கப்பட்ட காலத்தில் ஒரு வித்தியாசமான கலாசாரம் எம்மைப் பீடித்திருந்தது. அந்த காலகட்டத்தில் எம்மைக் கட்டாயப்படுத்திய அவ்வந்த நலவுரித்தலகுகளுக்கு ஏற்றவாறு சட்டத்தை மறந்து சக நல்லாட்சி விழுமியங்களை மறந்து கடமையாற்ற வேண்டிய அந்தக் கலாசாரம் போரின் பின்னரும் தொடர வேண்டிய அவசியமில்லை என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் கணனியைக் கற்பிக்கும் பெரும்பாலான தனியார் கல்வி நிலையங்களில் தரமான ஆசிரியர் இன்றி கற்பிக்கப்பட்டு வருகின்றது என வடக்கு மாகாண உறுப்பினர் பசுபதிப்பிள்ளை குற்றம்சாட்டியுள்ளார்.