புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

17 ஜூலை, 2014

வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் வீட்டிற்கு கூட்டமைப்பு விஜயம் 
காரைநகரில் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் வீட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சுரேஸ் பிறேமச் சந்திரன் மற்றும் மாகணசபை உறுப்பினர்களான சுகிர்தன், கஜதீபன், சிவயோகன் ஆகியோரும் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்ததுடன் குடும்பத்தினருக்கு தமது ஆறுதல்களைத்  தெரிவித்தனர்.இதேவேளை வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் குடும்பத்தினருக்கு கடுமையான நெருக்குதல்கள் தொடர்வதாக அங்கிருந்து  தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுமியையும் குடும்பத்தினரையும் காரைநகர் கடற்படை முகாமிற்கு அலைக்கழித்த கடற்படையினர் பிரச்சனையை பெரிதாக்காமல் விடும்படியும், அங்கு இருக்காமல் வேறு இடத்திற்கு மாறிச் செல்லும்படியும், இல்லாவிடில் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரும் எனவும் மிரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.