‘வடக்கு முதலமைச்சர் வேறெங்கும் இயங்கக்கூடாது! அழுத்திக் கூறிய வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள்’ என்று தலைப்பிட்டு தமிழரசுக் கட்சி ஆதரவு ஊடகங்கள் சில பரபரப்பு செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களும் விக்கினேஷ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பொறுப்பை ஏற்றதை விரும்பவில்லை என்ற பாணியில் செய்தியாக்கின.
ஆனால் உண்மையில் அந்தக் கருத்தை வலியுறுத்தி உரையாற்றியவர்கள் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களான ஆர்னோல்ட், சயந்தன் மற்றும் விந்தன் ஆகியோர் மட்டுமே என்பதே உண்மையாகும்.