புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 ஜன., 2016

புகையிரத சேவையில் நேர மாற்றம்

வடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரத சேவைகளில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று  தெரிவித்துள்ளது. 

இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி முதல் இந்த நேர மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.   

இதன்படி கொழும்பு - யாழ்பாணம்  சேவையில் ஈடுபடும் யாழ்தேவி கல்கிசையில் இருந்து காலை 05.50 இற்கு ஆரம்பமாகி கொழும்பு கோட்டையில் இருந்து காலை 06.35 இற்கு யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும் இந்த புகையிரதம் பிற்பகல் 02.37 இற்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளதுடன், பிற்பகல் 03.20 இற்கு காங்கேசன்துறையை சென்றடையவுள்ளது. 

யாழ்தேவி யாழ்பாண நேரத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்படும் போது, காங்கேசன்துறையில் இருந்து காலை 08.25 இற்கு பயணத்தை ஆரம்பித்து காலை 9.35 இற்கு யாழ்ப்பாணத்தையும், கொழும்பு கோட்டையை 06.32 இற்கும் சென்றடையவுள்ளது. 

ஞாயிற்றுக் கிழமைகளில் மாத்திரம் சேவையில் ஈடுபடக்கூடிய கடுகதிப் புகையிரதம், யாழ்ப்பாணத்திலிருந்து காலை 08.20 இற்கு பயணத்தை ஆரம்பித்து பிற்பகல் 04.25 இற்கு கொழும்பு கோட்டையை சென்றடையவுள்ளது. 

அத்துடன் தலைமன்னாரிலிருந்து புறப்படும் புகையிரதம் காலை 07.30 இற்கு பயணத்தை ஆரம்பித்து, காலை 10.50 இற்கு அநுராதபுரத்தையும், பிற்பகல் 04.05 இற்கு கொழும்பு கோட்டைக்கு வந்தடையும்.