புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2016

பிரித்தானிய அமைச்சருடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை!

இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகவல்களின்படி பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் அமைப்பு மீள் உருவாக்கம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று மாலை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பிரித்தானிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவாகியதன் பின்னர் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவு வலுப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

கடந்த செப்டம்பரில் இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் காட்டிய முனைப்புக்களின் பின்னரே இந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகவும் ஸ்வைர் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்படும் நல்லிணக்கமே பொருளாதார வளர்ச்சிக்கும் உந்துதலை அளிக்கும் எனவும் அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் மேலும் கூறினார்.

இதேவேளை இன்று காலை இலங்கைக்கு வருகைதந்த பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் நாளையதினம் யாழ்ப்பாணம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad