புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 ஜன., 2016

701 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்படவுள்ளது! மீள்குடியேற்ற அமைச்சு


தேசிய தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொள்வது நாட்டின் நிரந்தர அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான சமிஞ்சை என மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த அமைச்சின் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய விடுவிக்கப்பட்ட 701 ஏக்கர் காணிகள் எதிர்வரும் 22ஆம் திகதி இடம் பெயர்ந்த மக்களிடம் மீளவும் கையளிக்கவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன்,தேசிய பொங்கல் விழாவினையொட்டி நாளை யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி இந்து சமய அறநெறி பாடசாலை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைப்பார் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தைப்பொங்கலைச் சிறப்பாககொண்டாடும் வகையில் அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட 563 குடும்பங்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் முன்னேற்பாட்டில் பொங்கல் பொதி வழங்கி வைக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.