புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2016

பட்டம் ஏற்றிய மாணவன் பாம்பு தீண்டிச் சாவு!


பாம்புக் கடிக்குள்ளான பாடசாலை மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்.பருத்தித்துறை ஹட்லிக் கல்லூரியில் 2017 உயர் தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்று வருகின்ற வவுனியா சுண்டிக்குளத்தைச் சேர்ந்தவரும் தற்காலிகமாக துன்னாலை வடக்கு கரவெட்டியில் வசிப்பவருமான சிவலோக நாதன் தேசிகன் (வயது-17) என்ற மாணவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் பட்டம் ஏற்றும் விளையாட்டில் குறித்த மாணவன் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையே பாம்பு தீண்டியுள்ளது.

உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட குறித்த மாணவன் மறுநாள் செவ்வாய்க்கிழமை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குறித்த மாணவன் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் உயிரிழந்த மாணவனது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை 5 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

ad

ad