புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2016

புதிய உலக சாதனையை நோக்கி சானியா - ஹிங்கிஸ் இணை!

புதிய உலக சாதனையை நிகழ்த்தவிருக்கிறார்கள் சானியா மிர்சாவும் மார்ட்டினா ஹிங்கிஸும்.

சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் இந்த இணை, சீனாவின் சென் லியாங் - ஷாய் பெங் இணையை 6-2, 6-3 என்கிற நேர் செட்களில் தோற்கடித்தது. இதன்மூலம் தொடர்ந்து 28-வது வெற்றியைப் பெற்ற இணை என்கிற பெருமையை இருவரும் பெற்றுள்ளார்கள்.
முன்னதாக, 1994-ல், கிகி பெர்னாண்டஸ் - நடாஷா ஸ்வேரேவா இணை, தொடர்ந்து 28 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதுவே உலக சாதனையாகக் கருதப்படுகிறது. அந்தச் சாதனையை சானியா-ஹிங்கிஸ் இணை தற்போது சமன் செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற மகளிருக்கான பிரிஸ்பேன் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா-சுவிட்ஸர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை சனிக்கிழமை பட்டம் வென்றது. இவர்கள் இருவரும் இதுவரை 10 டபிள்யூடிஏ பட்டங்களை வென்றுள்ளார்கள்.
சிட்னி போட்டியின் அரையிறுதியில் சானியா இணை வெற்றி பெற்றால் அது அவர்களுடைய தொடர்ச்சியான 29-வது வெற்றியாகும். மேலும் அது புதிய உலக சாதனையாகவும் அங்கீகாரம் பெறும்

ad

ad