புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2016

தோல்வியுற்றதால் கோபம் கொண்ட ஐ.எஸ் அமைப்பு: தனது வீரர்களை உயிருடன் எரித்த கொடூரம்

ஈராக்கில் நடைபெற்ற போரில் ரமாடி நகரத்தை இழந்துவிட்டதன் காரணமாக கோபம் கொண்ட ஐ.ஸ் அமைப்பு தனது படைவீரர்களை உயிருடன்
எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் உள்ள ரமாடி நகரை கடந்த ஆண்டு மே மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர், அந்நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வந்த பின்னர், அங்கு பொதுமக்களை கொடுமைப்படுத்தி பல்வேறு அட்டூழியங்களை செய்து வந்தனர்.
இந்நிலையில், அமெரிக்க கூட்டுப்படை உதவியுடன் ஈராக் நாடு, ஐஎஸ் தீவிரவாதிகளுடன் கடுமையாக போராடி ரமாடி நகரை சமீபத்தில் கைப்பற்றியது.
இந்த பின்னடைவால் கோபமடைந்த ஐஎஸ் தீவிரவாதிகள், தங்கள் வீரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், போரில் தோல்வியடைந்து தப்பி ஓடிவந்த வீரர்களை உயிருடன் எரித்துக்கொலை செய்துள்ளனர்.
இதற்காக மொசூல் நகரில் உள்ள ஒரு இடத்தில் வட்டமிடப்பட்டு அதற்குள் வீரர்களை நிற்கவைத்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளனர்.
பொதுமக்கள் முன்னிலையில் வைத்து இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ad

ad