புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2016

பாலியல் வன்முறை தொடர்பான ஐ.நா நிபுணரை இலங்கை அழைக்கவேண்டும்! ஜனாதிபதியிடம் கோரிக்கை

போரின் போது பாலியல் வன்முறைகளை தடுக்கும் ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தை இலங்கை ஏற்றுள்ளமையை சர்வதேச உண்மை
மற்றும் நீதி திட்டம் வரவேற்றுள்ளது.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் போரின்போது பாலியல் வன்முறை தொடர்பான விசேட நிபுணர் செய்னாப் பங்குராவை இலங்கைக்கு அழைக்கவேண்டும் என்பது குறித்து நீதிதிட்ட அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் போரின்போதும் அதற்கு பின்னரும் பாலியல் வன்முறைகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் சுமத்தப்பட்டிருந்தன. இலங்கையின் பாதுகாப்பு படையினர் மீதே இந்தக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
எனினும் தமிழர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை என்று நீதிதிட்டம் குறைகூறியுள்ளது.
எனவே புதிய அரசாங்கம் தமக்குள்ள பொறுப்பை நிறைவேற்றும் வகையில் விசாரணைகளை நடத்தவேண்டும்.
இதன் ஒருக்கட்டமாக போரின் போது பாலியல் வன்முறை தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட நிபுணரை இலங்கைக்கு அழைக்கவேண்டும் என்று திட்டம் கோரிக்கை விடுத்துள்ளது.பாலியல் வன்முறை தொடர்பான ஐ.நா நிபுணரை இலங்கை அழைக்கவேண்டும்! ஜனாதிபதியிடம் கோரிக்கை

ad

ad