புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 ஜன., 2016

ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி மதுரையில் உண்ணாநிலை அறப்போர்: வைகோ அறிவிப்புஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் மதுரையில் உண்ணாநிலை அறப்போர் நடைபெறும் அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தின் அடையாளமாக நடத்தி வந்த ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு முறையான நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழர்களின் வாழ்வோடு ஜல்லிக்கட்டு இணைந்தது என்பதை வலியுறுத்தியும் மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் ஜனவரி 17 ஆம் தேதி மதுரை மாநகரில், ஓபுலா படித்துறை அருகில் மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும். இந்த அறப்போரில், மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களும், தொண்டர்களும், உணர்வாளர்களும் நானும் பங்கேற்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.