புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2019

யாழ்.நகர விடுதியில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!- உடந்தையாக இருந்த இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் 16 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு, உதவி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ். நகரில் அமைந்துள்ள விடுதி உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றுபவர் ஆகியோர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 நவ., 2019

சிறீகாந்தாவா? செல்வமா? பலசாலி: பிளவடையும் டெலோ!சிறீகாந்தா தரப்பு மேற்கொண்ட முயற்சி தோல்வி

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமையினை முழுமையாக கைப்பற்ற சிறீகாந்தா தரப்பு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று யாழில் நடத்திய கூட்டத்திற்கு போட்டியாக தனது அலுவலகத்தில் கூட்டமொன்றை கூட்ட அவர் முற்பட்ட போதும் அது தோல்வியில் முடிவமைடந்துள்ளது..
மஹிந்த பதவியேற்புடன் நாடாளுமன்றம் கலைகிறது?
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இன்று (20) பதவி விலகியுள்ளார்.
எச்சரிக்கை -சுவிஸ் குடியுரிமை  பெற்றுள்ள  தமிழ் இளைஞர் குடியுரிமையை பறித்துவி ட்டு இலங்கைக்கு  திருப்பி  அனுப்பட்டுள்ளார் லங்கன்தாள் பகுதியை  சேர்ந்த 25  வயதான  தமிழ் இளைஞர்  சுவிஸ் நாட்டிடை சேர்ந்த ஒருவரை  தாக்கி  கோமா  நிலைக்கு  செல்ல  வைத்துள்ளார்    சுகமாகி  மீண்டு வந்த  இந்நாடடவர்   தொடுத்த வழக்கின் பின்னர்  சில ஆண்டு சிறைவாசம்  சென்று  மீண்டவர்  மீண்டும் மற்றுமொருவரை  தாக்கி   காயம் அடைய  வைத்துள்ளார் இந்த இரண்டு  சம்பவங்களையு ம்  தனது  அணியை  சேர்ந்த நண்பர்களுக்காகவே  நடத்தியுள்ளார் திருமணமாகிய  இவர்  பெற்றோரும் இங்கேயே  வசித்து வருகின்ற நிலையில் இவரது சுவிஸ்  குடியுரிமையை பறி த்த பின்னர்  இலங்கைக்கு  நாடு கடத்தப்படுள்ளார் 

அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க சஜித் முடிவு கட்சிக்குள் சிலர் மேற்கொண்ட சதிகளாலேயே தோல்வி

ஐக்கிய தேசிய கட்சிக்குள் சிலர் மேற்கொண்ட சதிகளாலேயே ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி கண்டதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் போது சஜித் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

கோத்தாவிடம் தோற்போம் என்று தெரியும்: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மனோ

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தமைக்கான காரணம் தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் விளக்கமளித்துள்ளார்.

தனது போஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை அனுப்பினார் ரணில்; மாலை விசேட உரை

நாட்டில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து தென்னிலங்கை அரசியல் வட்டாரம் மேலும் பரபரப்பாகியுள்ளது.

மோடியின் செய்தியுடன் வந்த ஜெய்சங்கர்- 19ஆம் திகதி டில்லி செல்கிறார் கோத்தா

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நேற்று மாலை குறுகிய நேரப் பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்து,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவைச் சந்தித்துப் பேசினார்.

19 நவ., 2019

மஹிந்தவுக்கு பிரதமர் பதவி இல்லை

ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்‌ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ள நிலையில், அவர் தலைமையில் அமையவுள்ள காபந்து அரசாங்கத்தின் பிரதமராக, தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியுடன் பேசிய பின்னர் இறுதி முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கொண்டு செல்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மதிக்க வேண்டும்! - கோத்தாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

மனித உரிமைகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மதிப்பளிக்க வேண்டும் என்று என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வொசிங்டனில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இதனை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியாக கோத்தபாய!: மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் புதிய ஜனாதிபதி தனது கடமைகளை இன்று ஆரம்பிப்பார்

சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டபய ராஜபக்ஷ இன்று (19) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார்.

கோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி

னாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நானா விடுவேன் அமைச்சு கதிரையை:டக்ளஸ் ஆனால் எந்த முகத்தோடு போய் கேட்பேன் மக்கள் கூட்டமைப்போடு போய்டடங்களே

கோட்டபாய அமைச்சரவையில் அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லையென வெளிவரும் செய்திகளை ஈபிடிபி கட்சி மறுதலித்துள்ளது.

18 நவ., 2019

கோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்?

கோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்றி பேச்சுக்களை நடத்த தொடங்கியுள்ளது.

மிரடடுகின்றார் புதிய துட்டகெமுனு?

தன்னை துட்டகெமுனு மன்னனது வாரிசென அடையாளப்படுத்த முற்பட்டுள்ள கோத்தபாய எல்லாளனை வெற்றி கொண்ட பின்னர் அனுராதபுரத்தில் கட்டப்பட்ட விகாரை முன்றலில் தனது பதவியே பொறுப்பேற்றுள்ளார்.
சூட்டொடு சூடாக  பாராளுமன்ற தேர்தலையும் நடத்த திடடம்  
ரணிலை ராஜினாமா செய்ய வற்புறுத்தப்படுவதாக  செய்தி பாராளுமன்ற பெரும்பான்மை இல்லாது மகிந்த பிரதமராக  முடியுமா பாராளுமனறத தைக் கலைக்க தான் முடியும் தேர்தலுக்கு உத்தரவிடலாம் 

சஜித் உட்பட எழுவர் இராஜினாமா

சஜித் பிரேமதாசவின் தோல்வியைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச மற்றும் அவரது அணியை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர்.

ad

ad