புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

18 நவ., 2019

கோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்?

கோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்றி பேச்சுக்களை நடத்த தொடங்கியுள்ளது.

2015 ஆட்சி மாற்றத்தின் முன்னராக மகிந்த தரப்பிற்கு அழுத்தங்களை கொடுத்ததுடன் ஆட்சியை கவிழ்க்கவும் முன்னெடுப்புக்களை செய்துமிருந்தது.


இதனிடையே தன்னை ஆதரித்தவர்கள் துன்புறுத்தப்படக்கூடாது என்று சஜித் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபாயவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த சஜித் தேர்தலுக்கு பிந்தைய சூழல் அமைதியானது என்பதை உறுதிப்படுத்தவும் ,எனது வேட்புமனுவை ஆதரித்தமைக்காக எந்தவொரு குடிமகனும் துன்புறுத்தப்படக்கூடாது என்று கோத்தபாயவை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.