புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 நவ., 2019

யாழ்.நகர விடுதியில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!- உடந்தையாக இருந்த இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் 16 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு, உதவி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ். நகரில் அமைந்துள்ள விடுதி உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றுபவர் ஆகியோர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 16 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு, உதவி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ். நகரில் அமைந்துள்ள விடுதி உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றுபவர் ஆகியோர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் 16 வயதுடைய சிறுமி நேற்றுமுன்தினம் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞன் ஒருவர் அவருடன் காதல் வார்த்தைகள் பேசி யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், விடுதியிலேயே குறித்த சிறுமியை விட்டுவிட்டு அந்த இளைஞன் அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள பொலிஸ் மகளீர் பிரிவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.குறித்த முறைப்பாட்டில் தன்னை ஆசை வார்த்தைகள் கூறி விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்ற இளைஞன் தம்மை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்துசிறுமி வழங்கிய தகவலுக்கு அமைய யாழ் நகரில் இயங்கி வரும் பிரபல விடுதியின் உரிமையாளரும் அங்கு பணியாற்றும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய உதவி செய்த்தனர் என்ற குற்றச் சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்என்று பொலிஸார் தெரிவித்தனர்.